Headlines

கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம் 9 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பு: வருகின்ற வியாழக்கிழமை (18), கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல இடங்களுக்கு, ஒன்பது மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும். கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள் மற்றும் பத்தரமுல்ல, நுகேகொடை, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பல புறநகர்ப் பகுதிகளும் இதனால் பாதிக்கப்படும். எனவே, சிரமங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான நீரைச் சேமித்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *