Headlines

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் விசேட சந்திப்பு: உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து விவாதம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (20) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் அது இலங்கையின் எரிசக்தித் துறை மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது விரிவாகக் கலந்துரையாடினார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். குறிப்பாக, எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாப்பதற்கும், பொருளாதார பாதிப்புகளைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *