இலங்கைக்கு 194 கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது ஜப்பான்: பால் உற்பத்தி, கடற்படைக்குப் பலம்!
கொழும்பு: ஜப்பானிய அரசாங்கம், இலங்கைக்கு 963 மில்லியன் யென் (சுமார் 194 கோடி ரூபாய்) மானியத்தை வழங்க இணங்கியுள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ உடன்படிக்கைகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எதிர்வரும் ஜப்பான் விஜயத்தின்போது கைச்சாத்திடப்படவுள்ளன.
இந்த மானியத்தின் கீழ், 463 மில்லியன் யென் இலங்கையின் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும், 500 மில்லியன் யென் இலங்கை கடற்படையை வலுப்படுத்தும் பாதுகாப்பு உதவித் திட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடற்படைக்கு ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள் வழங்கப்படும். இந்த மானியத்தின் மூலம் இலங்கையின் அபிவிருத்தி மேலும் வலுப்பெறும்.
இந்தத் திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி ஜப்பானுக்கு அரசமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
