Headlines

மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி அனுரவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர்கள் முக்கிய கவனம் செலுத்தியுள்ளனர்.

இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் இட்டுள்ள பதிவில், இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, இந்திய – இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட முக்கிய முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

நெருக்கமான மற்றும் நம்பிக்கையான பங்காளிகள் என்ற வகையில், பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான தங்களது உறுதிப்பாட்டை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *