Headlines

பாணந்துறை நிலங்க’வின் வங்கிக் கணக்குகளை ஆராய CIDக்கு நீதிமன்றம் அனுமதி

கொழும்பு: தடுப்புக்காவலில் உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் ‘பாணந்துறை நிலங்க’ என்பவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள, கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (16) இந்த உத்தரவைப் பிறப்பித்தார். சந்தேகநபரின் இரண்டு வங்கிக் கணக்குகள் மூலம் பெருமளவு பணப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக CIDயினர் மன்றில் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இந்த வங்கிக் கணக்குப் பரிவர்த்தனைகளை ஆராய்வது அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து முக்கிய பாதாள உலக உறுப்பினர்களில் ‘பாணந்துறை நிலங்க’வும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *