Headlines

மீண்டும் நாடளாவிய ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது GMOA

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (04) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான தீர்மானம், இன்று நடைபெறவுள்ள GMOAவின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என சங்கத்தின் உதவிச் செயலாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் இடமாற்ற நடைமுறையில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து GMOA இந்த வாரம் ஏற்கனவே இரண்டு முறை பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

முன்னதாக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் எதிர்மறையான பதிலளித்தமையைக் கருத்திற்கொண்டே, மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கத் தீர்மானித்ததாக விஜேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *