Headlines

இவ்வருடமே ஆரம்பமாகும் அம்பாந்தோட்டை சைனோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: அமைச்சர் தகவல்!

கொழும்பு: சீனாவின் அரச எரிசக்தி நிறுவனமான சைனோபெக், 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிலான தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை, இவ்வருடத்திற்குள் ஆரம்பிக்கும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். இந்த சுத்திகரிப்பு நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படுவது, சுத்திகரிக்கப்படும் எரிபொருளில் எவ்வளவு சதவீதத்தை உள்நாட்டில் விற்க சைனோபெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்பதைப் பொறுத்தே உள்ளது. முன்னர் 20% ஆக இருந்த இந்த வரம்பை, 40% வரை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருகிறது. இதேவேளை, கொழும்புக்கு அருகிலுள்ள அரச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க 3 பில்லியன் டொலரை முதலீடு செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்து சமுத்திரத்தில் சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டி, இலங்கையின் இந்த பாரிய பொருளாதார மற்றும் எரிசக்தித் திட்டங்களுக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *