மேல், சபரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் தெற்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
சபரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தீவின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அதிகாலை வேளையில் மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் மூடுபனி நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் தயவாகக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
