‘ஏஹிபஸ்ஸிகோ – அமைதிக்கான நடைபயணம்’ (Ehipassiko – Walk for Peace) நிகழ்வின் நான்காம் நாள் பயணம் இன்று (25) மாவனல்லை பெலிகம்மன ரஜமஹா விகாரையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
இந்த விசேட ஆன்மீக ஊர்வலம், மாவனல்லையில் இருந்து புறப்பட்டு பின்னர் தொலங்கமுவ டட்லி சேனநாயக்க மத்திய கல்லூரியை நோக்கி பயணிக்கவுள்ளது.
தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வியட்நாமைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய பன்னாகார தேரரின் பங்குபற்றுதலுடன், இந்த அமைதி நடைபயணமானது கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி தம்புள்ளை குகைக் கோயிலில் இருந்து ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
