வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தென் மாகாணத்தின் கடலோரப் பகுதிகளிலும், களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கப் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
