போட்டியைப் புறக்கணிக்கிறதா பாகிஸ்தான்? – நடுவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆசியக் கோப்பையிலிருந்து விலகல் என எச்சரிக்கை!
துபாய்: இந்தியாவுக்கு எதிரான போட்டி நடுவர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆசிய கோப்பைத் தொடரிலிருந்து விலகிவிடுவோம் என எச்சரித்துள்ளது. இதனால், இன்று (17) நடைபெறவுள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னர், “வீரர்கள் கைகுலுக்க வேண்டாம்,” என போட்டி நடுவர் ஆண்டி பைர்கிராப்ட் அறிவுறுத்தியதே சர்ச்சை ஏற்படக் காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. அவரைத் தொடரிலிருந்து நீக்கினால் மட்டுமே தாங்கள் தொடர்ந்து விளையாடுவோம் என பாகிஸ்தான் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
ஒருவேளை பாகிஸ்தான் இப்போட்டியைப் புறக்கணித்தால், அமீரகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும்.
