Headlines

பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘தண்டகாரண்யம்’: வெளியீட்டிற்கு முன்பே குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்!

சென்னை: இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில், அதியன் ஆதிரை இயக்கியுள்ள ‘தண்டகாரண்யம்’ திரைப்படம், நாளை (19) வெளியாகவுள்ள நிலையில், அதன் பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. நக்சல் ஒழிப்பு என்ற பெயரில், அப்பாவி இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மீது அரசு அதிகாரம் நடத்தும் போலி என்கவுன்ட்டர்களைத் துணிச்சலுடன் அம்பலப்படுத்தும் படைப்பாக இப்படம் அமைந்துள்ளது. படத்தைப் பாராட்டியுள்ள இயக்குனர் சேரன், “ஆகச்சிறந்த படைப்பு. அதியன் ஆதிரை தமிழின் மிகச்சிறந்த இயக்குனராக வருவார்,” எனக் கூறியுள்ளார். திரைப்பட விமர்சகர் ரமேஷ் பாலா, படத்திற்கு 5க்கு 3.75 ரேட்டிங் வழங்கியுள்ளார். அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக அமையும் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *