ஆசியக் கிண்ணம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, குழுவில் முதலிடத்துடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!
அபுதாபி: நேற்று (18) நடைபெற்ற ஆசியக் கிண்ண T20 தொடரின் தீர்மானமிக்க போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி, ‘குரூப் பி’-யில் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், 170 என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு, குசல் மெண்டிஸ் 74 ஓட்டங்களைக் குவித்து வலுவான அடித்தளமிட்டார். பந்துவீச்சில், நுவன் துஷார 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம், இலங்கை அணி ஆடிய மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, குழுவில் முதலிடத்தைப் பிடித்தது. வங்கதேசம் இரண்டாவது அணியாகத் தகுதி பெற, இந்தப் போட்டியில் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது. இலங்கை தனது முதல் சூப்பர் 4 போட்டியில், நாளை (20) சனிக்கிழமை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
