இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் (Ceypetco) இன்று (மே 30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஓட்டோ டீசல் (Auto Diesel) லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் (Super Diesel) லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 478 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையும் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 285 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகள் (லீற்றருக்கு):
- ஓட்டோ டீசல் – ரூ. 407 (ரூ. 15 அதிகரிப்பு)
- சுப்பர் டீசல் – ரூ. 478 (ரூ. 20 அதிகரிப்பு)
- ஒக்டேன் 92 பெட்ரோல் – ரூ. 434 (ரூ. 24 அதிகரிப்பு)
- ஒக்டேன் 95 பெட்ரோல் – ரூ. 495 (ரூ. 25 அதிகரிப்பு)
- மண்ணெண்ணெய் – ரூ. 285 (ரூ. 20 அதிகரிப்பு)
