Headlines

7 கோடி ரூபாய் நிதி மோசடி: சப்ரகமுவ முன்னாள் அமைச்சர் அத்துல குமார விளக்கமறியலில்!

கொழும்பு: சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அத்துல குமார ராகுபத்தவை, எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டுள்ளது. 2016-2017ஆம் ஆண்டு காலப்பகுதியில், மாகாண அமைச்சராகப் பதவி வகித்தபோது, 70 மில்லியன் ரூபாய் (7 கோடி) அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டில், அவர் நேற்று முன்தினம் (17) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணைகளின்போது, 77 திட்டங்களில் 15 திட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்ட போதிலும், அந்தத் திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என CIDயினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *