Headlines

அனுமதிப்பத்திரமின்றி யானை வைத்திருந்த வழக்கு: ‘அலி ரோஷனுக்கு’ 15 வருட கடூழியச் சிறை!

கொழும்பு: செல்லுபடியான அனுமதிப்பத்திரமின்றி யானை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில், சமரப்புலிகே நிராஜ் ரோஷன் என்ற ‘அலி ரோஷன்’, குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 15 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து இன்று (19) தீர்ப்பளித்துள்ளது. மூவரடங்கிய நீதியரசர் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக, அவருக்கு 206 இலட்சம் ரூபாய் (2.06 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், குறித்த யானையை அரசுடமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏனைய மூன்று பிரதிவாதிகளையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *