Headlines

காலி மஹமோதரவில் புதிய சிறைச்சாலை – அரசாங்க வர்த்தமானி வெளியீடு!

காலியில் மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்று அமைக்கப்படவுள்ளதாக, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. Prisons Ordinance (Chapter 54) இன்படி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலின்படி, “மஹமோதர சிறைச்சாலை” (Mahamodara Prison) என இந்த வசதி அமைக்கப்படவுள்ளதுடன், அதன் அதிகார வரம்பு நாடளாவிய ரீதியிலானதாக இருக்கும். இந்த உத்தரவில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஜூலை 07, 2026 அன்று கொழும்பில் கையெழுத்திட்டுள்ளார்.

அத தெரண (Ada Derana) வினவியபோது, நீதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர், மூடப்பட்ட மஹமோதர வைத்தியசாலை வளாகத்தின் ஒரு பகுதியில் புதிய சிறைச்சாலை தற்காலிகமாகச் செயற்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *