Headlines

பழைய போகம்பரை சிறைச்சாலை மீண்டும் சிறையாக வர்த்தமானியில் அறிவிப்பு!

—நீதி அமைச்சரின் விசேட வர்த்தமானி வெளியீடு—

பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் அளித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகம் இனிவரும் காலங்களில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக ஒரு சிறைச்சாலையாகச் செயற்படும் என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *