Headlines

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன சடலமாக மீட்பு; தற்கொலை என சந்தேகம்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சீ.டீ. விக்ரமரத்ன சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பல்வேறு மூலங்களின் தகவல்களின்படி, அதுருகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதால் அவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை பொலிஸ் சேவையில் 30 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய சீ.டீ. விக்ரமரத்ன, நாட்டின் 35வது பொலிஸ் மா அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *