Headlines

பிரபாகரன் ஒரு தாய் போல”: நாகையில் சர்ச்சையைக் கிளப்பிய விஜய் பேச்சு!

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் நேற்று (20) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் புகழ்ந்து பேசியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தாய்மை வாஞ்சையைக் காட்டிய ஒரு தலைவனை இழந்த பிறகு, எமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், இலங்கையிலோ அல்லது உலகின் வேறு எங்கு இருந்தாலும் துன்பப்படுகிறார்கள். அவர்களுக்காகக் குரல் கொடுப்பது நமது கடமை,” என பிரபாகரனை மறைமுகமாகக் குறிப்பிட்டு விஜய் பேசினார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளின் தலைவரையும், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குக் காரணமானவரையும் விஜய் புகழ்ந்து பேசியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேலும், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தனது கட்சியின் முக்கிய நோக்கம் எனவும், திமுக அரசு போலக் கடிதம் மட்டும் எழுத மாட்டோம் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *