Headlines

பொட்ட அமில’ உள்ளிட்ட நால்வர் கைது: 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

கொழும்பு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் முக்கிய உறுப்பினரும், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொட்ட அமில’ என்பவரை, அவரது கூட்டாளிகள் மூவருடன் மொரகஹஹேன பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து, சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5,300 போதை மாத்திரைகள் மற்றும் 15,000 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. கொனாபொல பகுதியில் போதைப்பொருள் விநியோகிக்கச் சென்ற அமிலவின் கூட்டாளி ஒருவரைக் கைது செய்து விசாரித்தபோதே, ‘பொட்ட அமில’ குறித்த தகவல் கிடைத்துள்ளது. பூஸ்ஸா சிறையில் உள்ள ‘மோல் கசுன்’ மற்றும் ‘மன்னா ரமேஷ்’ ஆகியோரின் நெருங்கிய சகாவான இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற அமிலத் தாக்குதலில் தனது பார்வையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட நால்வரும் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *