இ.போ.ச. சாரதி, நடத்துனர்களாக பெண்கள்: ‘விமானப் பணிப்பெண்’ தரத்தில் புதிய சீருடை – அமைச்சர்!
கொழும்பு: இலங்கை போக்குவரத்து சபையில் (இ.போ.ச.) விரைவில் சாரதிகளாகவும், நடத்துனர்களாகவும் பெண்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர்களுக்கு, விமானப் பணிப்பெண்கள் மட்டத்திலான, புதிதாக வடிவமைக்கப்பட்ட சீருடைகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, 450 சாரதிகள் மற்றும் 300 நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும், இதில் பெண்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். முதற்கட்டமாக, கொழும்பு மாவட்ட பாடசாலை பேருந்து சேவைகளில் பெண் ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் ஒரு முக்கியப் படியாக இது பார்க்கப்படுகிறது.
