Headlines

குறூவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்: இருவர் பலி, நால்வர் காயம்!

குறூவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து, குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு (06) சிறைச்சாலையில் முதன்முறையாக அமைதியின்மை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இன்று காலை (07) கைதிகளுக்கு இடையே மீண்டும் பதற்றம் தீவிரமடைந்தது. இதனையடுத்து, சிறைச்சாலைக்குள் நிலவிய கட்டுப்பாடற்ற சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அதிகாரிகள் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

அத்துடன், இந்த அமைதியின்மையின் போது கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை வைத்தியசாலைக்குச் சேதம் விளைவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *