இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) பெற்றோல் 92 மற்றும் பெற்றோல் 95 ஆகியவற்றின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை திருத்தம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.
சமீபத்திய விலைத் திருத்தத்தின்படி, பெற்றோல் 92 இன் விலை லிட்டருக்கு 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 414 ரூபாவாக இருந்த ஒரு லிட்டர் பெற்றோல் 92 இன் புதிய விலை 399 ரூபாவாகும்.
அதேபோல, பெற்றோல் 95 ஒக்டேன் விலையும் லிட்டருக்கு 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. 495 ரூபாவாக விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெற்றோல் 95 இன் புதிய விலை 475 ரூபாவாகும்.
எனினும், டீசல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
