ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியூயோர்க் பயணம்!
நியூயோர்க்: ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச்சபை (UNGA) கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியூயோர்க் சென்றுள்ளார்.
அமெரிக்க நேரப்படி இன்று (24) காலை 8:50 மணியளவில், ஜோன் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார்.
அவரை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய, தனது தூதுக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து வரவேற்றார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதியுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜயதா ஹேரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஜயம், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியத்துவம் பெறுகிறது.
