நியூயோர்க்கில் விஜித ஹேரத் – ஜெய்சங்கர் சந்திப்பு
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு ஜனாதிபதியுடன் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய மற்றும் அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவும், நெருங்கிய ஒத்துழைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் அலிசன் ஹூக்கருடனும் அவர் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ஐ.நா.வில் உரையாற்றவுள்ள நிலையில், இந்தச் சந்திப்புகள் நாட்டின் சர்வதேச உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்றுள்ளன.
