ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவுஸ்திரேலியப் பிரதமருடன் நியூயோர்க்கில் சந்திப்பு!
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸை நேற்று (24) பிற்பகல் நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
புதிய முதலீடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்தச் சந்திப்பு, இருதரப்பு சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
