Headlines

பல மாகாணங்களுக்குக் கனமழை எச்சரிக்கை: 100 மி.மீ.க்கும் அதிக மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

கொழும்பு: இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடமத்திய மாகாணம் மற்றும் மாத்தளை, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலதிக காலநிலைத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *