Headlines

கரூர் துயரம்: நடிகர் விஜய் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் – தலைவர்கள் வலியுறுத்தல்!

சென்னை: கரூரில் நேற்று (27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இதற்குப் பொறுப்பேற்று, தவெக தலைவர் விஜய் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, “விஜய், காவல்துறையின் விதிகளை மீறிக் கூட்டம் நடத்தியதே அப்பாவி மக்களின் உயிரிழப்புக்குக் காரணம். எனவே, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல், திமுக மாணவரணிச் செயலாளர் ராஜீவ் காந்தி, “தனது அதிகாரப் பசிக்காக அப்பாவி மக்களின் உயிரைக் காவு வாங்கிய நடிகர் விஜய், சென்னையை நோக்கி ஓடி ஒளிந்துள்ளார்,” எனக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தத் துயரச் சம்பவம், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *