ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் இன்று சந்திப்பு!
டோக்கியோ: அரசமுறைப் பயணமாக ஜப்பானுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்நாட்டுப் பிரதமர் ஷிகெரு இஷிபாவை இன்று (29) டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்திப் பங்காண்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உயர்மட்ட சந்திப்பில், ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர்களான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர். இது, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் என நம்பப்படுகிறது.
