கல்வி மூலம் தொழில்நுட்பக் குழுவை உருவாக்குவதே இலக்கு”: AI மாநாட்டில் பிரதமர் ஹரிணி!
கொழும்பு: இலங்கையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு, செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கையாளக்கூடிய ஒரு குழுவை, கல்வி மூலம் உருவாக்க வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நேற்று (29) நடைபெற்ற, இலங்கையின் முதலாவது தேசிய AI தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சியான ‘National AI Expo 2025’-இல் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
“தொழில்நுட்பக் கருவிகளின் பலன்களை அனைவரும் பெறக்கூடிய ஒரு முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்,” எனவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தக் கொள்கை அடிப்படையாக அமையும்.
