என்னை பழிவாங்குங்கள், மக்களை ஒன்றும் செய்யாதீர்கள்’: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் உருக்கமான வேண்டுகோள்!
சென்னை: கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, மூன்று நாட்கள் மௌனத்திற்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் இன்று (30) முதன்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது உரையில், “சிஎம் சார், உங்களுக்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் தொண்டர்களையோ, மக்களையோ ஒன்றும் செய்யாதீர்கள்,” என அவர் கேட்டுக்கொண்டார். “நான் 5 பிரச்சார இடங்களுக்குச் சென்றிருக்கிறேன், அங்கே ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் கரூரில் மட்டும் இப்படி நடக்கிறது. இது மக்களுக்குத் தெரியும்,” எனக் கூறி, இந்தச் சம்பவம் ஒரு சதியாக இருக்கலாம் என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
“என் வாழ்க்கையில் இதுபோலொரு வலி மிகுந்த தருணத்தைப் பார்த்ததில்லை,” எனக் குறிப்பிட்ட அவர், தனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாகத் தொடரும் எனவும் சூளுரைத்தார். இந்த வீடியோ, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
