Headlines

ஜப்பான் விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடு திரும்பினார்!

கொழும்பு: ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (01) காலை நாடு திரும்பினார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி, ஜப்பானிய சக்கரவர்த்தி மற்றும் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோரைச் சந்தித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இலங்கையின் பால் உற்பத்தித் துறைக்கான உதவி மற்றும் கடற்படைக்கான ட்ரோன் தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பல முக்கிய உடன்படிக்கைகள் இதன்போது எட்டப்பட்டன. மேலும், ஒசாகாவில் நடைபெற்ற ‘எக்ஸ்போ 2025’ கண்காட்சியிலும், ஜப்பானிய முதலீட்டாளர்களுடனான சந்திப்பிலும் கலந்துகொண்ட ஜனாதிபதியின் இந்தப் பயணம், இருதரப்பு சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *