சர்ச்சைக்குரிய “கிறிஷ்” (Krrish) திட்ட ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முன்னரான மாநாடு (Pre-trial conference) இன்றுடன் நிறைவடைந்ததாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்த வழக்கின் பிரதான விசாரணையை வரும் ஜூலை 07 ஆம் திகதி நடத்துவதற்கு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.
