அரசாங்க புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சல்லே, தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சட்ட ஆலோசகர்கள் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
