சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒரு முக்கிய அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளார். சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க விரும்பும் சாமானிய பொதுமக்கள், போதுமான பேருந்து வசதிகள் கிடைக்காமல் சென்னை உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் தவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களின் இந்தத் துயர நிலையைக் கருத்தில் கொண்டு, அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை தடையின்றி நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார். இதற்காக, தமிழகத்தில் நிலவும் தற்போதைய அசாதாரணச் சூழலைக் கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு நேரத்தை மேலும் 2 மணி நேரம் நீட்டித்து, இரவு 8 மணி வரை அனுமதிக்க வேண்டும் என்று விஜய் தேர்தல் ஆணையத்திற்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
