Headlines

ஜூன் 20 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் கட்டாயம்: மீறினால் கடும் நடவடிக்கை!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் சீட் பெல்ட் (பாதுகாப்புப் பட்டி) அணிவது தொடர்பான விதிமுறைகள் ஜூன் 20 ஆம் திகதி முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை அறிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படும் என சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

முன் ஆசனம் மற்றும் பின் ஆசனம் ஆகிய இரண்டிலும் பயணிப்பவர்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

இந்த விதிமுறையை பொது மக்கள் கடைப்பிடிப்பதற்காக முன்னர் சலுகைக்காலம் வழங்கப்பட்டிருந்தது, அந்த காலம் ஜூன் 19 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

அதன்படி, ஜூன் 20 ஆம் திகதி முதல் எந்தவித விதிவிலக்கும் இன்றி சீட் பெல்ட் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என தலைவர் மஞ்சுள குலரத்ன வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *