Headlines

பின்புற ஜன்னலால் புகுந்து மொரகஹஹேன வங்கியில் கொள்ளை; தப்பியோடிய மூவர் கும்பலுக்கு வலைவீச்சு.

மொரகஹஹேன, கொரலைமா பகுதியிலுள்ள கிராமிய வங்கி ஒன்றின் பாதுகாப்பகத்தை (சேப்) உடைத்து, மூன்று பேர் அடங்கிய குழுவினர் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (23) அதிகாலை 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிப்போட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், வங்கியின் பின்புறம் உள்ள குளியலறை ஜன்னல் வழியாக கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அதன்பின்னர், வங்கியின் பாதுகாப்பகத்தை (Safe) பலவந்தமாக உடைத்துத் திறந்து, அதனுள் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை அடையாளம் காணவும், அவர்களைக் கைது செய்யவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *