இயக்குனர் நெல்சன் திலீப்குமார் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸையே அதிரவைத்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர் 2’. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது பாகத்திலும் முதல் நாளில் இருந்தே வசூல் மழை பொழிந்து வரும் இந்தப் படம், விரைவில் ரூ. 1000 கோடி வசூல் சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வரும் வேளையில், இப்படத்தில் நடித்த முன்னணி நட்சத்திரங்களின் தலைசுற்ற வைக்கும் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
யாருக்கு எவ்வளவு சம்பளம்? – முழு விபரம்:
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: முத்துவேல் பாண்டியனாக மீண்டும் வந்து திரையரங்குகளைக் கொண்டாட்டக் களமாக மாற்றியுள்ள ரஜினிகாந்திற்கு இப்படத்திற்காக ரூ. 110 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்: கெஸ்ட் ரோலில் வந்தாலும் தனது மாஸ் கெத்து மூலமாக திரையரங்கை அதிரவைத்த மலையாள திரையுலகின் மார்க்கண்டேயன் மோகன்லாலுக்கு ரூ. 30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
- நடிகை வித்யா பாலன்: இரண்டாவது பாகத்தில் புதிதாக இணைந்து தனது அபார நடிப்பால் கவனம் ஈர்த்த பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு ரூ. 6 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
- நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா: தனக்கே உரித்தான வில்லத்தனமான மிரட்டல் நடிப்பால் ரஜினியையே ஆச்சரியப்பட வைத்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரூ. 5 கோடிக்கும் மேல் பாராட்டு ஊதியமாகக் கிடைத்துள்ளது.
- ரம்யா கிருஷ்ணன்: முத்துவேல் பாண்டியனின் மனைவியாக முதலாம் பாகத்தின் தொடர்ச்சியைத் தக்கவைத்த ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 5 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
- யோகி பாபு: தனது டைமிங் டார்க் காமெடிகள் மூலம் ரசிகர்களைச் சிரிக்க வைத்த யோகி பாபுவிற்கு ரூ. 3 கோடி சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
- சுராஜ் வெஞ்சரமூடு: சமீபகாலமாகத் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்து வரும் மலையாளப் பிரபல நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவிற்கு ரூ. 1 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரலாற்றுச் சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ‘ஜெயிலர் 2’, பாக்ஸ் ஆபீஸில் மேலும் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!
