Headlines

வெலிக்கடை சிறையில் உள்ள முன்னாள் முதன்மைப் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதன்மைப் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவில் (Cardiology Unit) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசு வங்கியொன்றிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர், நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக் கோளாறுகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு அமைய, அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு இருதயவியல் பிரிவில் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *