அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்றிரவு 7 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 5.00 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரு கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை மேம்பாட்டு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகளுக்காகவே இந்த நீர்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், நீர் தடைக்காலத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
