Headlines

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மி.மீ.-க்கு அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யும். ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் பிற்பகல் 1 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த காற்று வீசும். மின்னல் மற்றும் காற்றின் தாக்கத்தைக் குறைக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *