தொகுதி நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தவிசாளராகவும் உறுப்பினராகவும் எம். கே. சமன் ஸ்ரீ ரத்நாயக்கவை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இதேவேளை, எம். பீ. ரோஹண புஷ்பகுமார மற்றும் கே. தவலிங்கம் ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கான நியமனக் கடிதங்களை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர்களுக்கு வழங்கி வைத்தார்.
தொகுதி நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
