Headlines

கடுவன்னாவையில் மூடப்பட்ட கொழும்பு-கண்டி வீதி மீண்டும் திறக்கப்பட்டது!

மண்சரிவு அபாயம் காரணமாக போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்த கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கடுவன்னாவ, கனேதென்ன பகுதி, இன்று (04) காலை 6.00 மணி முதல் மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கீழ் கடுவன்னாவ பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று (03) இந்த வீதிப்பகுதி மூடப்பட்டு போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது.

வானிலை சீரடைந்ததையடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) பரிந்துரைகளின் அடிப்படையில் வீதியை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இப்பகுதியினூடாக பயணிக்கும் போது வாகன சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *