Headlines

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 4 மணித்தியால நீர்வெட்டு.

கண்டி பிரதான நீர் விநியோகத் திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கண்டி மாவட்டத்தில் இன்று (22) நான்கு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

இதன்படி, ராஜபிஹில்ல, மெதவல (பழைய), மெதவல (புதிய) மற்றும் கலாகெதர சேவை நிலையங்களிலும் மாவத்தகம சேவைப் பகுதியிலும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

நீர் விநியோகம் தடைப்படும் விரிவான பகுதிகள் பின்வருமாறு:

ராஜபிஹில்ல சேவைப் பகுதி: உடுவாவல, பொல்வத்த வீதி, க்ளெவத்த, வஸ்கேவத்த, உட பொகவல, பல்லெ பொகவல, பிஹங்கேவத்த, அஹஸ்லியத்த, கொட்டுவேவத்த, நாகஹமுல வீதி, தவலன்கொட, பலகொல்ல, ஹப்புகொட, பட்டியவத்த, ராஜபிஹில்ல, மொரகஹவெல, அத்தரகம, உள்ளாதுபிட்டிய வீதி, பொஹோரபெத்தென்ன வீதி மற்றும் அத்தரகம தெகிந்த வீதி.

மெதவல (பழைய) சேவைப் பகுதி: காவும்கொஹே வீதி, கோனிகொட, ஜயந்தி வீதி, குருகடே, பால்கும்புர, இடமேகம, அம்பேகம, கொரொக்காசங்க வீதி, எலமல்பத்த, கொட்டுத்தென்ன, பெதியகொடவத்த, களுவான, போத்தோட்ட, ஹரன்கஹதென்ன, தொடந்தென்ன, கும்புரேகெதர, தெம்பரலோவ, திப்புட்ட மற்றும் தலாபெல்லகொட வீதி.

மெதவல (புதிய) சேவைப் பகுதி: படுகொட, அஹலகசின்ன, தித்தெனிய, ஓவிஸ்ஸ, வட்டகொட, தொபகம்மன, ஹெதெனிய, சூரியகும்புர, அம்பருப்ப, ஹரன்கஹவ, பொக்காவல, வால்தென்ன மற்றும் பதிராட.

கலாகெதர சேவைப் பகுதி: கலாகெதர, வேவபட, பொயகொடவைச் சூழவுள்ள பகுதிகள், ரம்புக்கணை வீதி, பொஹோலியத்த வீதி மற்றும் குருநாகல் வீதி.

மாவத்தகம சேவைப் பகுதி: மாவத்தகம, பாரந்தன வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.

இத்தற்காலிகத் தடையால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும், அப்பகுதிகளிலுள்ள நுகர்வோரை முன்கூட்டியே போதுமான அளவு நீரைச் சேமித்து வைக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *