நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும், பாடசாலைகளைத் திறப்பதா அல்லது மூடுவதா எனத் தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதிகளில் நிலவும் வானிலை நிலைமையைக் கருத்திற் கொண்டு இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
