உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே உள்ளிட்ட சந்தேகநபர்கள் மீதான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து வரும் மே 20 ஆம் திகதி அறிக்கையிடுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளது.
சுரேஷ் சல்லே இன்று (22) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் அத தெரண நிருபர் தெரிவித்துள்ளார்.
