தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை (NIC) வழங்கும் பணிகள் இன்று (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு நாள் சேவை உட்பட அடையாள அட்டை வழங்கும் அனைத்துப் பொதுச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி முதல் இந்தச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது தொழில்நுட்பக் கோளாறுகள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட அனைத்துச் சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளன என்றும் பொதுமக்கள் இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஆட்பதிவுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
