பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமது கைது மற்றும் தடுத்து வைத்தலுக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் பணிப்புரைக்கமைய, குறித்த மனு மீதான விசாரணை 2027 ஜனவரி 19 ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
