Headlines

மீகமுவ சிறையில் கைதிகள் மோதல்: இருவர் பலி, 25 பேர் காயம்

மீகமுவ சிறைச்சாலைக்குள் இன்று (05) பிற்பகல் இரு குழு கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மோதலைத் தொடர்ந்து காயமடைந்த சுமார் 25 கைதிகள் மீகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

அதேவேளை, இப்பகுதிக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) அனுப்பப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையொன்றை அம்பலப்படுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைதிகளின் காயங்கள் குறித்த முழுமையான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *